சுடச்சுட

  

  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன், அனைத்திலும் 100 சதவீதம் அளிக்கவே இம்முடிவு: டிவில்லியர்ஸ்

  By DIN  |   Published on : 23rd August 2017 09:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AB_de_Villiers

   

  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், சர்வதேச நட்சத்திர வீரராகவும் திகழ்பவர் டிவில்லியர்ஸ். இவர் தனது நேர்த்தியான அதிரடி ஆட்டத்துக்கு புகழ்பெற்றவர். 

  இந்நிலையில், தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து புதன்கிழமை திடீரென விலகினார். முன்னதாக, டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியிருந்தார். 

  டெஸ்ட் போட்டிகளில் தனது நிலைப்பாடு குறித்து இதர கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதில், டிவில்லியர்ஸ் தனது சுயநலத்துக்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகக் கூடாது என்று தெரிவித்தனர்.

  மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதுதான் டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு கற்றுத் தரும் சிறந்த பாடமாக இருக்கும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

   

  இந்நிலையில், தனது முடிவு குறித்து டிவில்லியர்ஸ் கூறியாதவது:

  கடந்த 12 மாதங்களாக என் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தது. அதற்கு பதிலளிக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகிறேன். கடந்த ஒரு வருடமாக எனது பணிச்சுமைகளை சரிசெய்வது தொடர்பாக ஆலோசித்து வந்தேன். எனக்கு என்று மனைவி, இரண்டு குழந்தைகள் என அழகான குடும்பம் உள்ளது. நான் அவர்களுடனும் நேரம் செலவிட விரும்புகிறேன். 

  கடந்த 2004 முதல் 3 வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருகிறேன். இதனால் நான் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் சோர்ந்து இருந்தேன். இந்த இடைவேளை எனக்கு அதிலிருந்து மீண்டு வர உதவியது. மேலும், எனது எதிர்காலத்தை நீட்டிக்க விரும்பி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் சில பரிந்துரைகளை முன்வைத்து அதன்படி செயல்பட்டேன். 

  ஆனால், நான் சுயநலமாக செயல்படுவதாக என் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதில் துளியும் உண்மையில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்த வரமாகும். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். அதை மனதில் வைத்தே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினேன். 

  தற்போது புத்துணர்ச்சியாகவும், முழு உடல் தகுதியுடனும் உள்ளேன். இனி வரும் காலங்களில் மீண்டும் அனைத்து ரக கிரிக்கெட் போட்டிகளிலும் களமிறங்க தயாராக உள்ளேன் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai