சர்வதேச போட்டிகளில் இருந்து வெய்ன் ரூனி ஓய்வு...!

சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி புதன்கிழமை தெரிவித்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து வெய்ன் ரூனி ஓய்வு...!

நட்சத்திர கால்பந்து வீரர் வெய்ன் ரூனி சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். இதன்மூலம் தனது 14 ஆண்டுகால சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி. இதுவரை 119 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கியுள்ளார். அதில், 53 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும் அந்த அணிக்கு 23 போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 2002-ம் ஆண்டு 16-ஆவது வயதில் தனது முதல் கோலை அடித்தார்.

தற்போது வரை 462 கிளப் போட்டிகளில் விளையாடி 200 கோல்கள் வரை அடித்துள்ளார். இதன்மூலம் கிளப் போட்டிகளில் 200 கோல்கள் அடித்த 2-ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதுகுறித்து வெய்ன் ரூனி கூறியாதவது:

இது நீண்ட நாட்களாக நான் யோசித்து எடுத்த தீர்க்கமான முடிவாகும். எனது வாழ்நாளில் எடுத்த கடினமான முடிவும் கூட. இதுதொடர்பாக எனது குடும்பத்தார், மேலாளர் மற்றும் நெருக்கமானவர்களிடம் கலந்து ஆலோசித்தேன்.

இங்கிலாந்து அணி எனக்கு எப்போதுமே சிறப்பானதாகும். நான் ஓய்வு பெற இதுவே சரியான நேரமாகும். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் எனது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com