சுடச்சுட

    

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்றில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 28-ஆம் தேதி முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. அதற்கான தகுதிச்சுற்று நியூயார்க்கில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி 6-1, 1-6, 3-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோ சூடாவிடம் தோல்வி கண்டார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 1-6, 4-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் யானிக் ஹன்மானிடம் தோல்வி கண்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai