சுடச்சுட

    

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்-யு.பி.யோதா அணிகள் இடையிலான ஆட்டம் 33-33 என்ற புள்ளிகள் கணக்கில் 'டை'யில் முடிந்தது.
    உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய யு.பி.யோதா அணி 19-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக ஆட, ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 25-25 என்ற கணக்கில் சமநிலையை எட்டின.
    இதன்பிறகு 31-29 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நேரத்தில் மோசமாக ஆடியதால் முன்னிலையை இழந்தது. எனினும் கடைசி விநாடியில் யு.பி.யோதா ரைடரைப் பிடித்ததன் மூலம் ஆட்டத்தை 'டை'யில் முடித்தது தமிழ் தலைவாஸ்.
    ஹரியாணா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது.

    இன்றைய ஆட்டம்
    யு.பி.யோதா-
    தெலுகு டைட்டன்ஸ்
    நேரம்: இரவு 8
    இடம்: லக்னெள
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai