சுடச்சுட

  
  america-open

  ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து கனடாவின் மிலோஸ் ரயோனிச் விலகியுள்ளார்.
  இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  இடது மணிக்கட்டு எலும்பில் வலி இருப்பதன் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக ரயோனிச் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரி போன்ற முன்னணி வீரர்கள் அமெரிக்க ஓபனில் இருந்து விலகிவிட்டனர். இப்போது அந்த வரிசையில் ரயோனிச்சும் இணைந்துள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 28-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்குகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai