சுடச்சுட

    

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

    By DIN  |   Published on : 25th August 2017 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sindu2

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சியூங் நன்னுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து.

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து 19-21,
    23-21, 21-17 என்ற செட்
    கணக்கில் ஹாங்காங்கின் சியூங் நன்னை வீழ்த்தினார். சிந்து தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் சன் யூவை எதிர்கொள்கிறார்.
    ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-14, 21-18 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சனை தோற்கடித்தார். வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த்,'இது மிகச்சிறந்த ஆட்டம். சில நேரங்களில் ஆட்டம் பரபரப்பாக சென்றாலும், இறுதியில் நான் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
    சர்வதேச தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவை சந்திக்கிறார். ஸ்ரீகாந்தும், சன் வானும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். எனினும் கடைசியாக மோதிய இரு ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜெயராம் தோல்வி: மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 11-21, 10-21 என்ற நேர் செட்களில் சீனாவின் சென் லாங்கிடம் தோல்வி கண்டார்.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai