சுடச்சுட

  

  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் தங்களின் முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் 3 நாள்களில் இந்தியா எந்தப் பதக்கமும் வெல்லவில்லை.
  இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாக்ஷி மாலிக் மூலம் 4-ஆவது நாளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாக்ஷி மாலிக் தனது முதல் சுற்றில் (60 கிலோ எடைப்பிரிவு) 1-3 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை லூயிஸா நீமெஸ்ஸிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
  மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், அமெரிக்காவின் விக்டோரியா ஆண்டனியிடம் தோல்வி கண்டார். இதனால் அவரும் வெறுங்கையோடு வெளியேறினார்.
  இந்தியாவின் நவ்ஜோத் கௌர் (69 கிலோ) தனது முதல் சுற்றில் 5-10 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஆசிர்பட்டிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
  மற்றொரு இந்தியரான ஷீதல் தோமர் (53 கிலோ) தனது முதல் சுற்றில் 10-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ்ஸிகா மெக்பெய்னை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் ஷீதல் தோமர் 2-4 என்ற கணக்கில் ருமேனியாவின் எஸ்டீராவிடம் தோல்வி கண்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai