சுடச்சுட

    
    sindu

    சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து ஓர் இடம் முன்னேறி 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த், இரு இடங்களை இழந்து 10-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் 16-ஆவது இடத்திலும், சாய் பிரணீத் 19-ஆவது இடத்திலும், எச்.எஸ்.பிரணாய் 15-ஆவது இடத்திலும், அஜய் ஜெயராம் 17-ஆவது இடத்திலும் உள்ளனர்.
    மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஓர் இடம் முன்னேறி 24-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 20-ஆவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
    ஆடவர் இரட்டையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் முதல் 25 இடங்களில் இந்திய ஜோடிகள் இல்லை.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai