சுடச்சுட

    
    kabadi

    லக்னௌவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய யு.பி.யோதா-தெலுகு டைட்டன்ஸ் அணிகள்.

    5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
    இதன்மூலம் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள யு.பி.யோதா அணி 30 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு இது 8-ஆவது தோல்வியாகும்.
    உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. 4 நிமிடங்களின் முடிவில் யு.பி.யோதா அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற, 10-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது தெலுகு டைட்டன்ஸ்.
    இதன்பிறகு இரு அணிகளும் மாறிமாறி முன்னிலை பெற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் தெலுகு டைட்டன்ஸ் 12-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
    பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் யு.பி.யோதா அணி அபாரமாக ஆடியது. முதல் 4 நிமிடங்களில் 5 புள்ளிகளைக் கைப்பற்றிய அந்த அணி, 15-13 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    அதைத் தொடர்ந்து தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி தனது சிறப்பான ரைடின் மூலம் புள்ளிகளைக் கைப்பற்ற, 35-ஆவது நிமிடத்தில் ஸ்கோர் சமநிலையை (20-20) எட்டியது.
    இதன்பிறகு யு.பி.யோதா ரைடர் நிதின் தோமர் அபாரமாக ஆட, அந்த அணி 24-22 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மறுமுனையில் தெலுகு டைட்டன்ஸ் கடுமையாகப் போராடியபோதும், இறுதியில் இரு புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்க நேரிட்டது. நிதின் தோமர் தனது ரைடின் மூலம்
    யு.பி.யோதாவுக்கு 6 புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.

    இன்றைய ஆட்டங்கள்
    யு மும்பா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்
    நேரம்: இரவு 8
    பெங்கால் வாரியர்ஸ்-பாட்னா பைரேட்ஸ்
    நேரம்: இரவு 9
    இடம்: மும்பை
    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai