சுடச்சுட

  

  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி!

  By எழில்  |   Published on : 25th August 2017 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srikanth1

   

  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில்  14-21, 18-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவிடம் தோல்வியடைந்தார். இதனால் ஸ்ரீகாந்தின் தொடர் வெற்றிகளுக்கு (13 ஆட்டங்களில் வெற்றி) ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

  ஸ்ரீகாந்தும், சன் வானும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சன் வான் 3 முறை வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக மோதிய இரு ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அதேபோல இன்றும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளார் ஸ்ரீகாந்த்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai