சுடச்சுட

    

    அமெரிக்க ஓபன் தகுதிச் சுற்று: ராம்குமார் வெளியேற்றம்

    By DIN  |   Published on : 26th August 2017 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் 2-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் தோல்வி கண்டார். 
    ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 28-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்குகிறது. 
    அதை முன்னிட்டு நியூயார்க் நகரில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது சுற்று ஆட்டத்தில் ராம்குமார் 3-6, 7-6 (5), 2-6 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹத்திடம் தோல்வி கண்டார். 
    இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர். இந்த நிலையில் ராம்குமாரும் தோற்றதால், அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இந்தியர்கள் யாரும் தகுதி பெறவில்லை. 
    அடுத்த மாதம் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் கனடாவுடன் மோதுகிறது இந்தியா. இது கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெறுகிறது. அதற்காக யூகி பாம்ப்ரி, ராம்குமார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெறவுள்ளனர். 
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai