Enable Javscript for better performance
அமெரிக்க ஓபன்: போட்டித் தரவரிசையில் நடாலுக்கு முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க ஓபன்: போட்டித் தரவரிசையில் நடாலுக்கு முதலிடம்

    By DIN  |   Published on : 26th August 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nadal

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுக்கும், மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுக்கும் போட்டித் தரவரிசையில் முதலிடம் கிடைத்துள்ளது.இவர்கள் இருவரும் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 28-ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. அதை முன்னிட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு போட்டித் தரவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோருக்கு போட்டித் தரவரிசையில் முதல் 5 இடங்கள் கிடைத்துள்ளன.
    ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் உலகின் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, கனடாவின் மிலோஸ் ரயோனிச் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா, ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் போட்டித் தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai