சுடச்சுட

  
  tharanga

  இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக இலங்கை கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  அதனால் இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரு போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக கபுகேதரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணி 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  கடைசி 3 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினேஷ் சன்டிமல் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் குணதிலகாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அடுத்த இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக லஹிரு திரிமானி சேர்க்கப்பட்டுள்ளார். 
  அணி விவரம்: சமரா கபுகதேரா (கேப்டன்), தினேஷ் சன்டிமல், லஹிரு திரிமானி, ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலகா, குஷல் மென்டிஸ், சமரா கபுகேதரா, மிலிந்தா சிறிவர்த்தனா, புஷ்பகுமாரா, அகிலா தனஞ்ஜெயா, லக்ஷன் சன்டாகன், திசாரா பெரேரா, டி சில்வா, லசித் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, விஸ்வா பெர்னாண்டோ, உபுல் தரங்கா (5-ஆவது ஆட்டத்திற்கு மட்டும்).
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai