Enable Javscript for better performance
உலக பாட்மிண்டன்: சாய்னாவுக்கு வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
    கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், இந்த முறை அரையிறுதியில் தோற்றதால் வெண்கலத்தோடு வெளியேற நேர்ந்தது.
    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சாய்னா 21-12, 17-21, 10-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார்.
    இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருந்தனர். அதில் சாய்னா 6 வெற்றிகளைப் பெற்றிருந்ததால், அவர் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
    விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல் செட்டை சாய்னா 21-12 என்ற கணக்கில் கைப்பற்ற, அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 2-ஆவது செட்டின் பாதி வரை இருவரும் மாறிமாறி முன்னிலை பெற்றனர். அதன்பிறகு அபாரமாக ஆடிய நஜோமி, சாய்னாவிடம் இருந்து 2-ஆவது செட்டை பறித்தார்.
    தொடர்ந்து நடைபெற்ற 3-ஆவது செட்டில் நஜோமியின் ஆக்ரோஷ ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் சாய்னா திணறினார். அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய நஜோமி, அந்த செட்டை 21-10 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி வெற்றி கண்டார்.
    இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஜப்பானியர் என்ற பெருமை நஜோமிக்கு கிடைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai