சுடச்சுட

    
    sindu

    சீனாவின் சன் யூவுக்கு எதிரான காலிறுதியில் ஆக்ரோஷமாக ஆடிய பி.வி.சிந்து.

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் யூவை வீழ்த்தினார். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சிந்து, 39 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். 
    சிந்து தனது அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான சென் யூஃபெய்யை சந்திக்கிறார். சிந்து ஏற்கெனவே இரு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ஸ்ரீகாந்த் தோல்வி: ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சன் வான் ஹோவிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லும் ஸ்ரீகாந்தின் கனவு கலைந்தது. இதற்கு முன்னர் சன் வானுடன் மோதிய இரு ஆட்டங்களில் ஸ்ரீகாந்த் வென்றிருந்தார். அதனால் இந்த ஆட்டத்திலும் அவர் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபாரமாக ஆடிய சன் வான், நேர் செட்களில் ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai