Enable Javscript for better performance
தேசிய ஸ்குவாஷ்: 15-ஆவது முறையாக ஜோஷ்னா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா 15-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
    கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஜோஷ்னா 11-6, 8-11, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் லக்ஷயா ரவீந்திரனை தோற்கடித்தார். இது ஜோஷ்னா வென்ற 15-ஆவது தேசிய சாம்பியன் பட்டமாகும். இன்னும் ஒரு பட்டம் வெல்லும்பட்சத்தில் 16 பட்டங்கள் வென்ற புவனேஸ்வரி குமாரியின் சாதனையை சமன் செய்வார்.
    ஆடவர் ஒற்றையர் பிரிவில் செளரவ் கோஷல் 12-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கோஷல் தனது இறுதிச் சுற்றில் 11-8, 11-13, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் மகேஷ் மங்கோன்கரை வீழ்த்தினார்.
    சாம்பியன் பட்டம் வென்ற ஜோஷ்னா, செளரவ் கோஷல் ஆகியோருக்கு தலா ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ.11 லட்சமாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai