சுடச்சுட

  
  vinstend

  டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிரான காலிறுதியில் பெளதிஸ்டா.

  வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
  அமெரிக்காவின் வின்ஸ்டன் சலேம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெளதிஸ்டா 6-2, 7-6 (3) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை தோற்கடித்தார்.
  போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெளதிஸ்டா தனது அரையிறுதியில் ஜெர்மனியின் ஜன் லென்னார்டு ஸ்டிரஃப்பை சந்திக்கிறார். லென்னார்டு தனது காலிறுதியில் 6-4, 7-6 (2) என்ற நேர் செட்களில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை வீழ்த்தினார்.
  மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் கைல் எட்மான்ட் 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்டீவன் ஜான்சனை வீழ்த்தினார். 
  எட்மன்ட் தனது அரையிறுதியில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவின் டேமிர் தும்ஹுர்ரை சந்திக்கிறார். டேமிர் தனது காலிறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சுங் ஹியோனை தோற்கடித்தார்.


   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai