Enable Javscript for better performance
2-ஆவது டெஸ்ட்:மே.இ.தீவுகள்-287/4- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.
    இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 70.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 100 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச், காபிரியேல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
    இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்திருந்தது.
    2-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் பிரத்வெயிட் 134 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டரில் களம்புகுந்த ஷாய் ஹோப்பும் சதமடிக்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.
    மேற்கிந்தியத் தீவுகள் அணி 92.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. ஷாய் ஹோப் 129, ரோஸ்டான் சேஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 29 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai