சுடச்சுட

  
  ind_vs_sl_toss

   

  இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

  இந்நிலையில், பல்லகெலேவில் 3-ஆவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

  மேலும், டெஸ்ட் தொடர் ஆரம்பித்து தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் இலங்கை, இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

  இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கபுகேதரா, பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி நடக்கும் மைதானத்தில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  அணி வீரர்கள் விவரம்:

  இந்திய அணி:

  ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுவேந்திர சாஹல்.

  இலங்கை அணி:

  நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), லாஹிரு திரிமன்னே, குசால் மெண்டீஸ், தினேஷ் சன்டிமல், ஏஞ்செலோ மேத்யூஸ், சமரா கபுகேதரா (கேப்டன்), மிலிந்த ஸிரிவர்தனா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்த சமீரா, விஷ்வ ஃபெர்னாண்டோ, லாசித் மலிங்கா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai