சுடச்சுட

  
  aus-vs-ban2708

   

  வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

  இதன் முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 84 ரன்களும், தமிம் இக்பால் 71 ரன்களும் குவித்தனர். 

  ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஆஷ்டன் ஆகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஷகிப் அல் ஹசன், மெஹந்தி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

  வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஆஸ்திரேலியா இன்னும் 242 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai