Enable Javscript for better performance
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம்-260- Dinamani

சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

    இரு அணிகளுக்கு இடையே வங்கதேச தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
    தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் சிறப்பாக ஆட, உடன் வந்த செளம்யா சர்க்கார் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இம்ருல் கயஸ், சபீர் ரஹ்மான் ஆகியோர் டக் அவுட் ஆக தொடக்கத்திலேயே தடுமாறத் தொடங்கியது வங்கதேசம்.
    எனினும், அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பாலுடன் இணைந்தார். இந்த ஜோடி அருமையாக ஆடி விக்கெட் சரிவைத் தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவருமே அரைசதம் கடந்தனர்.
    இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், 144 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்து தமீம் இக்பால் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே 133 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து வீழ்ந்தார் ஷாகிப் அல் ஹசன்.
    அடுத்து வந்த கேப்டன் முஷ்ஃபிகர் ரஹீம் 18, நாசிர் ஹுசைன் 23, மெஹதி ஹசன் 18, தைஜுல் இஸ்லாம் 4, ஷஃபியுல் இஸ்லாம் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இவ்வாறாக, 78.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.
    ஆஸ்திரேலிய தரப்பில், பட் கம்மின்ஸ், நாதன் லயன், அஷ்டோன் அகர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கிளன் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் எடுத்தார்.
    ஆஸ்திரேலியா-18/3: இதையடுத்து தனது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்து தடுமாற்றமான நிலையில் இருந்தது. மட் ரென்ஷா 6, ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக ஆடிய டேவிட் வார்னர் 8, உஸ்மான் கவாஜா 1 ரன்கள் எடுக்க, நாதன் லயன் டக் அவுட் ஆனார். வங்கதேச தரப்பில் மெஹதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai