சுடச்சுட

  

  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார், கவிந்தர் பிஷ்த் ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

  19-ஆவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெல்டர்வெயிட் (69 கிலோ) பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார் தனது முதல் சுற்றில் மால்டோவாவின் வாசிலி பெலெளûஸ எதிர்கொண்டார்.
  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் மனோஜ் குமார் வெற்றி பெற்றார். அவர் தனது 2-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் வெனிசூலாவின் கேப்ரியேல் மாஸ்ட்ரே பெரேûஸ சந்திக்கிறார்.
  ஃப்ளைவெயிட் (52 கிலோ) எடைப்பிரிவில் இந்தியாவின் கவிந்தர் பிஷ்த் தனது முதல் சுற்றில் ஜப்பானின் ரியுசெய் பாபாவை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். அவர் தனது 2-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் அல்ஜீரியாவின் முகமது ஃப்லிஸ்ஸியை எதிர்கொள்கிறார்.
  இந்நிலையில், இந்தியாவுக்கான சிறிய சருக்கலாக 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் சதீஷ் குமார் தோல்வி கண்டார். 2 முறை உலக சாம்பியனான அஜர்பைஜானின் முகமது ரஸýல் மஜுதோவை தனது முதல் சுற்றில் எதிர்கொண்ட சதீஷ் குமார், அவரிடம் 0-5 என்ற கணக்கில் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
  இதனிடையே, மார்க்கி குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீரர்களான அமித் பாங்கல் 49 கிலோ எடைப் பிரிவிலும், கெளரவ் பிதூரி 56 கிலோ எடைப் பிரிவிலும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
  இதுகுறித்து, இந்திய அணி பயிற்சியாளர் சான்டியாகோ நீவா கூறுகையில், "மனோஜ் மற்றும் கவிந்தருக்கான முதல் சுற்று வித்தியாசமானதாகவும், சற்று கடினமானதாகவும் இருந்தது. இருப்பினும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai