சுடச்சுட

  

  கணினியில் மட்டுமல்ல; களத்திலும் விளையாட வேண்டும்: நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 28th August 2017 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  இன்றைய தலைமுறை இளைஞர்கள், கணினியில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திலும் வியர்வை சிந்த விளையாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

  ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினமான அக்டோபர் 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், "மன் கீ பாத்' வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய மோடி இளைஞர்களுக்கு அறிவுறுத்தியதாவது:
  இந்தியா இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு என்பது, விளையாட்டுக் களத்தில் பிரதிபலிக்க வேண்டும். உலக விளையாட்டுப் போட்டிகளில் நாட்டின் இளம் வீரர்கள் பங்கேற்க வேண்டும். கணினியில் விளையாடுவதை விட, வியர்வை சிந்தி களத்தில் விளையாடுவது மிகவும் முக்கியம். ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம். ஹாக்கி விளையாட்டில் அவரது பங்களிப்பு இணையில்லாதது. இன்றைய இளைஞர்கள் விளையாட்டில் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே இதை நினைவுகூருகிறேன்.
  விளையாட்டு என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாக வேண்டும். விளையாட்டினால், உடல், மனம், குணம் என அனைத்தும் மேம்படும். ஒரு காலத்தில் விளையாடச் சென்ற குழந்தைகள் எப்போது வீட்டுக்கு வருவார்கள் என்று பெற்றோர் காத்திருந்தனர். இப்போது, தனது குழந்தைகள் எப்போது விளையாட வெளியில் செல்வார்கள் என்று பெற்றோர் சிந்திக்கும் நிலை உள்ளது.
  நாட்டில் உள்ள விளையாட்டுத் திறன் மிக்க வீரர்களைக் கண்டறியும் வகையில், திறன் தேடும் இணையதளம் ஒன்றை விளையாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை (28) தொடங்குகிறது. இதில், விளையாட்டுத் துறையில் தனது சாதனையுடன் கூடிய சுயவிவரங்களை ஒருவர் பதிவேற்றம் செய்யலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு தகுந்த பயிற்சியை விளையாட்டு அமைச்சகம் வழங்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai