சுடச்சுட

    
    spt4

    புரோ கபடி போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை 32-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி.
    இரு அணிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் 17 ரைடு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. பெங்களூரு புல்ஸ் அணி, 15 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது.
    பெங்கால் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் ஜாங் குன் லீ 11 ரைடுகளில் 6 புள்ளிகள் பெற்றார். தடுப்பாட்டக்காரர் சுர்ஜீத் சிங் 8 டேக்கிள் புள்ளிகள் பெற்றார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக, அதன் கேப்டன் ரோஹித் குமார் 7 ரைடு புள்ளிகள் பெற்றார். தடுப்பாட்டக்காரர் குல்தீப் சிங் 5 டேக்கிள் புள்ளிகள் பெற்றார்.
    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பெங்கால் அணி முதல் பாதியில் 11-9 என முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்திலும் அந்த அணி சிறப்பாக செயல்பட, இறுதியில் 32-26 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai