சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.
    அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 127 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ஷாய் ஹோப் 253 பந்துகளுக்கு 23 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் எடுத்தார்.
    கெமர் ரோச் ஆட்டமிழக்காமல் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்து-88/2: இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிக் கொண்டிருந்த இங்கிலாந்து, 32.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோன்மேன் 51, கேப்டன் ஜோ ரூட் ரன்கள் இன்றி ஆடிக் கொண்டிருந்தனர். முன்னதாக ஆடிய அலாஸ்டர் குக் 23, வெஸ்ட்லே 8 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai