சுடச்சுட

    

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த சிந்து, சாய்னாவுக்குப் பரிசுத்தொகை அறிவிப்பு!

    By DIN  |   Published on : 28th August 2017 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    saina_sindu1

     

    உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் நஜோமியை எதிர்கொண்டார் சிந்து. இதில் முதல் 2 செட்களை முறையே நஜோமி, சிந்து கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டின் ஒவ்வொரு கேமிலும் இருவருமே கடுமையாக போட்டியிட்டதால், ஆட்டத்தின் பரபரப்பு இறுதிவரை நீடித்தது. எனினும் இறுதியில் நஜோமி வெற்றியை தனதாக்கினார். அரையிறுதியில் சாய்னாவை வீழ்த்திய நஜோமி, இறுதிச்சுற்றில் சிந்துவை வீழ்த்தியுள்ளார். நவோமி - சிந்து இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் தற்போது நஜோமி 4, சிந்து 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ரியோ ஒலிம்பிக், சிங்கப்பூர் ஓபன் ஆகியவற்றில் நவோமியை சிந்து வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சாய்னா 21-12, 17-21, 10-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். கடந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், இந்த முறை அரையிறுதியில் தோற்றதால் வெண்கலத்தோடு வெளியேற நேர்ந்தது. இதையடுத்து உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில் அகில இந்திய பாட்மிண்டன் சங்கம், சிந்து - சாய்னா ஆகிய இருவருக்கும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. சிந்துவுக்கு ரூ. 10 லட்சமும் சாய்னாவுக்கு ரூ. 5 லட்சமும் வழங்கவுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai