2-ம் நாளில் வங்கதேசம் 88 ரன்கள் முன்னிலை: ஆஸி.க்கு பின்னடைவு

முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியாவை விட வங்கதேச அணி 88 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
2-ம் நாளில் வங்கதேசம் 88 ரன்கள் முன்னிலை: ஆஸி.க்கு பின்னடைவு

வங்கதேசம், ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 84 ரன்களும், தமிம் இக்பால் 71 ரன்களும் குவித்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் ஆஷ்டன் ஆகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக மாட் ரென்ஷா 45, ஆஷ்ட்ன் ஆகர் 41 ரன்கள் எடுத்தனர்.

அற்புதமாக பந்துவீசிய வங்கதேச நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெஹதி ஹாசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் தமிம் இக்பால் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை விட வங்கதேச அணி 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவு வரை 88 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com