சுடச்சுட

    

    அகில இந்திய கூடைப்பந்து: ஆர்.சி.எஃப்., ராணுவ அணிகள் வெற்றி

    By DIN  |   Published on : 29th August 2017 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டங்களில் ஆர்.சி.எஃப்., புணே இந்திய ராணுவ அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

    பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்கியது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 2-ஆவது நாளான திங்கள்கிழமை, முதல் ஆட்டத்தில் கபூர்தலா ஆர்.சி.எஃப். - சென்னை அரைஸ் ஸ்டீல் அணிகள் மோதின.
    இதில், 96- 88 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்.சி.எஃப். அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், புணே இந்திய ராணுவ அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், ராணுவ அணி 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியை வீழ்த்தியது.
    3-ஆவது போட்டியில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து சென்னை சுங்கத் துறை அணி மோதியது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 82-71 என்ற புள்ளிகள் கணக்கில் சுங்கத் துறை அணியை வீழ்த்தியது.
    3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் விஜயா வங்கி - அரைஸ் ஸ்டீல், சென்னை சுங்கத் துறை - கேரள மின்வாரியம், பஞ்சாப் காவல் துறை - ஆர்.சி.எஃப்., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai