சுடச்சுட

    

    சாய்னாவின் தோல்விக்கு காரணம் என்ன? பயிற்சியாளர் விமல் குமார் பதில்

    By DIN  |   Published on : 29th August 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கும், அரையிறுதிக்கும் இடையே போதிய காலஅவகாசம் இல்லாததே சாய்னாவின் தோல்விக்கு காரணம் என அவருடைய பயிற்சியாளர் விமல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற அரையிறுதியில் சாய்னா நெவால், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். இதனால் சாய்னா வெண்கலப் பதக்கத்தோடு வெளியேற நேர்ந்தது.
    இது தொடர்பாக விமல் குமார் கூறியதாவது: சாய்னாவுக்காக வருத்தப்படுகிறேன். அவருக்கு காலிறுதிக்கும், அரையிறுதிக்கும் இடையே போதிய காலஅவகாசம் கிடைக்கவில்லை. அவர் முந்தைய நாள் இரவில் காலிறுதியை விளையாடிவிட்டு, அடுத்த நாள் காலையில் அரையிறுதியில் விளையாட நேர்ந்தது. ஒட்டுமொத்தத்தில் போட்டி அட்டவணைதான் பிரச்னை.
    எந்த ஆட்டத்தை எப்போது நடத்துவது என்பதை தொலைக்காட்சி தீர்மானிக்கக்கூடாது. இதற்கு தொழில்நுட்ப கமிட்டியே பொறுப்பு. ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஆட்டத்துக்கும், மற்றொரு ஆட்டத்துக்கும் இடையே போதிய காலஅவகாசம் இருப்பதை தொழில்நுட்ப கமிட்டியினர் உறுதி செய்ய வேண்டும். காலஅவகாசம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்ப்பது அவசியமாகும்.
    இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கும் இதே பிரச்னைதான். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீகாந்தும், சீனாவின் சென் லாங்கும் முந்தைய நாள் இரவில் மோதினர். ஆனால் அடுத்த நாள் காலையிலேயே ஸ்ரீகாந்த், தனது அடுத்த சுற்று ஆட்டத்தை விளையாட நேர்ந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டி என்பது மிகப்பெரிய போட்டியாகும். அதை மற்ற போட்டிகளுடன் ஒப்பிட இயலாது. எனவே ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு துல்லியமான போட்டி அட்டவணையை தயார் செய்வது அவசியமாகும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai