சுடச்சுட

    

    மாநில அளவிலான கால்பந்து: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன்

    By DIN  |   Published on : 29th August 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    திருச்சி ஜமால் முகமது கல்லூரி சார்பில் ஜமால் முகமது கோப்பைக்கான 6-ஆவது மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த 26 -ஆம் தேதி தொடங்கியது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 -க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின.
    திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
    முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கோவை பி.எஸ்.ஜி.கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியை வென்றது. மற்றொரு அரையிறுயில் சென்னை லயோலா கல்லூரி அணி 11-10 என்ற கோல் கணக்கில் திருச்சி தூய வளனார் கல்லூரி அணியை தோற்கடித்தது.
    இரண்டாவது அரையிறுதியில் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல்கள் அடிக்காததால் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சடன் டெத் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் வென்ற லயோலா கல்லூரி அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜ்முதீன் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினார்.
    போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஷாஇன்ஷா, உதவி உடற்கல்வி இயக்குநர் மு. பிரதீப்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai