சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் அந்த அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 70.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 127 ஓவர்களில் 427 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் பிரத்வெயிட் 134, ஷாய் ஹோப் 147 ரன்கள் குவித்தனர்.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 59 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஜோ ரூட் 72, பென் ஸ்டோக்ஸ் 58, மாலன் 61, மொயீன் அலி 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 37, ஸ்டூவர்ட் பிராட் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai