சுடச்சுட

  
  lyon

   

  வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்களில் 260 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்ஹசன் 84 ரன்களும், தமிம் இக்பால் 71 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ், நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது. இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 25.5 ஓவர்களில் 68 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 16-ஆவது முறையாகும். மெஹைதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

  2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 30 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தார்கள். முன்னதாக செளம்ய சர்க்கார் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தமாக 88 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது வங்கதேசம்.

  இந்நிலையில், வங்கதேச அணி தனது 2-வது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிம் இக்பால் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். லயன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக உள்ளதால் இந்த இலக்கை அடைய ஆஸ்திரேலிய மிகவும் சிரமப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  TAGS
  BANvAUS
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai