சுடச்சுட

  

  4-வது ஒரு நாள் போட்டி: கேப்டன் கபுகேதரா விளையாடுவது சந்தேகம்!

  By எழில்  |   Published on : 29th August 2017 02:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Kapugedera1

   

  இந்தியா-இலங்கை இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் கொழும்பில் வியாழன் அன்று நடைபெறுகிறது.

  3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை ஒருநாள் கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டதால், அந்த அணி கபுகேதரா தலைமையில் களமிறங்கியது. கேப்டன் தரங்காவுக்குப் பதிலாக தினேஷ் சன்டிமல் இடம்பெற்றார். காயம் காரணமாக விலகியுள்ள குணதிலகாவுக்குப் பதிலாக லஹிரு திரிமானி களமிறங்கினார். 

  இந்நிலையில் முதுகு வலி காரணமாக இலங்கை அணியின் கேப்டன் கபுகேதரா 4-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு முன்பே அவர் முதுகு வலியால் அவதிப்பட்டாலும் அப்போட்டியில் பங்கேற்றார். அதன்பிறகு எந்தவொரு பயிற்சியிலும் ஈடுபடவில்லை. 

  இதுகுறித்து இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா கூறியதாவது: 4-வது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இன்னமும் அவர் போட்டியிலிருந்து விலகவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதன் அன்று நிலவரத்தைப் பார்த்து முடிவெடுப்போம். நாளையும் அவர் பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் 4-வது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்றார்.  

  3-வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு தினேஷ் சன்டிமல் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

  முதல் மூன்று ஆட்டங்களில் வென்றுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக 5-0 என்கிற கணக்கில் தொடரை வெல்லத் தீவிரமாக உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai