ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு ராஜிநாமா

இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழுவினர் அனைவரும் தங்கள் பதவிகளை செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்தனர்.
ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு ராஜிநாமா

இந்திய அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்தது.

இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா உட்பட 4 பேர் ராஜிநாமா செய்தனர். ஜெயசூரியா தலைமையிலான இந்த குழுவில் உள்ள ரோமேஷ் கலுவிதரனா, ரஞ்சித் மடுருசிங்கே, எரிக் உபஷாந்தா ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாஸிரி ஜெயசேகராவிடம் வழங்கினர். கடந்த மே 1-ந் தேதி 2016 முதல் இவர்கள் தேர்வுக்குழுவில் செயல்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கை அணியில் அதிகப்படியான வீரர்களை தேர்வு செய்தது தான் தொடர் தோல்விகளுக்கு காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் போதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்துவருவதால் தான் ஒரு அணியாக விளையாட முடியாமல் போனது. இது வீரர்களின் நம்பகத்தைன்மையை குறைத்துவிட்டது என போதாஸ் விளக்கமளித்தார்.

கடந்த மே 1, 2016-ல் சனத் ஜெயசூரியா தலைமையிலான தேர்வுக்குழு பதவியேற்றது முதல் இதுவரை இலங்கை அணியில் 40 வீரர்களை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com