சுடச்சுட

  

  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
  எனினும், காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்த மற்றொரு இந்தியரான அமித் பாங்கல் அதில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
  ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாந்தம்வெயிட் (56 கிலோ) காலிறுதியில் இந்தியாவின் கெளரவ் பிதுரி, டுனீசியாவின் பிலெல் மெகதியை எதிர்கொண்டார்.
  இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் கெளரவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
  இதன்மூலம், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தை உறுதி செய்த 4-ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் சொந்தமாக்கியுள்ளார். அத்துடன், முதல் முறையாக பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதைச் செய்யும் 2-ஆவது இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
  இதனிடையே, 49 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமித் பாங்கல், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மடோவிடம் வீழ்ந்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai