சுடச்சுட

    

    சென்னை படையணி ராணுவ அதிகாரி ஆரோக்கிய ராஜீவிற்கு அர்ஜூனா விருது

    By DIN  |   Published on : 30th August 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அர்ஜுனா விருது பெற்ற ஆரோக்கிய ராஜீவ் ராணுவத்தின் சென்னை படையணியைச் சேர்ந்த இளநிலை அதிகாரி ஆவார்.
    26 வயதான ஆரோக்கிய ராஜீவ் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை செளந்திரராஜன் வேன் டிரைவர்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட மறுநாள் 22 மே, 1991 அன்று பிறந்ததால் அவரது நினைவாக இவருக்கு ஆரோக்கிய ராஜீவ் என பெற்றோர்கள் பெயர் சூட்டினர். பள்ளியிலேயே தடகளத்தில் சிறந்து விளங்கி பல சாதனைகள் படைத்தார்.
    2011-ஆம் ஆண்டு நாயப் சுபேதாராக ராணுவப் பணியில் சேர்ந்த ராஜீவ் 2012-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேசிய தடகளச் சாம்பியன் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். இதைத் தொடர்ந்து பல பரிசுகள் வென்றார்.
    சென்னை படையணியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் அர்ஜூனா விருது பெறும் இரண்டாவது வீரர் ஆவார். இதற்கு முன்னதாக 1967-ம் ஆண்டு தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பரான பீட்டர் தங்கராஜ் ராணுவத்தில் இணைந்து மெட்ராஸ் ரெஜிமெண்டில் பணியாற்றியபோது அர்ஜூனா விருது பெற்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai