சுடச்சுட

  

  வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
  ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைய இன்னும் 156 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த அணியின் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.
  இரு அணிகளுக்கு இடையே டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.
  அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது.
  இதையடுத்து, 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடி வரும் ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 75, ஸ்டீவன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai