Enable Javscript for better performance
2-ஆவது டெஸ்ட்: மே.இ.தீவுகள் 267/4- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது 2-ஆவது இன்னிங்ஸில் 80.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.
    லீட்ஸில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 70.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 127 ஓவர்களில் 427 ரன்கள் குவித்தது.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து, தனது 2-ஆவது இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    பின்னர் 322 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், கடைசி நாளில் 80.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. ஷாய் ஹோப் 98, பிளாக்வுட் 17 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai