வங்கதேசத்துக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் வார்னர் சதம்!

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸி. வீரர் வார்னர் சதமடித்துள்ளார்...
வங்கதேசத்துக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் வார்னர் சதம்!

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸி. வீரர் வார்னர் சதமடித்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. வார்னர் 75, ஸ்டீவன் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைய இன்னும் 156 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததாலும் வார்னர் களத்தில் தொடர்ந்ததாலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. 3-வது விக்கெட்டுக்குப் பிரமாதமாக விளையாடிய வார்னரும் ஸ்மித்தும் 162 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 121 பந்துகளில் வார்னர் சதமடித்தார். இது அவருடைய 19-வது டெஸ்ட் சதமாகும். எதிர்பாராதவிதமாக 112 ரன்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். பிறகு, ஸ்மித் 37 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் திணறல் தொடங்கியது.

உணவு இடைவேளையின்போது 57 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. உணவு இடைவேளைக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன் வீசிய முதல் பந்தில் போல்ட் ஆகி 14 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இதனால் 199 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com