சுடச்சுட

  

  சூதாட்டப் புகாரில் பாகிஸ்தான் வீரருக்கு 5 ஆண்டு தடை!

  By எழில்  |   Published on : 30th August 2017 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sarjeel1

   

  பாகிஸ்தான் வீரர் சர்ஜீல் கானுக்கு சூதாட்டப் புகாரில் 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  துபையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) போட்டி தொடங்கிய 2-ஆவது நாளே சூதாட்டப் புகார் காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய பேட்ஸ்மேனான சர்ஜீல் கான். பிறகு, பிஎஸ்எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு முகவருடன் தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து சர்ஜீல் கான் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

  சர்ஜீல் கான் உள்ளிட்ட வீரர்கள் மீதான சூதாட்டப் புகார்களை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையில் சர்ஜீல் கான் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் கிரிக்கெட் விளையாட அவருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  அடுத்த 30 மாதங்களுக்குச் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஜீல் கானால் விளையாடமுடியாது. அதன்பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு சர்ஜீல் கானால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கமுடியும். 

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சர்ஜீல் கான் தரப்பு கூறியுள்ளது.

  28 வயதான சர்ஜீல் கான், ஒரு டெஸ்ட், 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 15 சர்வதேச டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai