சுடச்சுட

  

  அகில இந்திய கூடைப்பந்து இறுதிச் சுற்றில் ராணுவம், ஐ.ஓ.பி. அணிகள்

  By DIN  |   Published on : 31st August 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  baske-ball

  கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டியின் அரையிறுதியில் மோதிய ஐ.ஓ.பி. - விஜயா வங்கி அணிகள்.

  கோவையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ராணுவம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிகள் மோதுகின்றன.
  பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கியது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-ஆவது நாளான புதன்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
  முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து பெங்களூரு விஜயா வங்கி அணி விளையாடியது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 74 - 62 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயா வங்கி அணியை வீழ்த்தியது. 
  ஐ.ஓ.பி. வங்கி வீரர்கள் பிரசன்ன வெங்கடேஷ் 24 புள்ளிகளும், சிவபாலன் 17 புள்ளிகளும் சேர்த்தனர். விஜயா வங்கி அணியின் கார்த்திகேயன் 17 புள்ளிகளும், அனில்குமார் 16 புள்ளிகளும் சேர்த்தனர்.
  மற்றொரு ஆட்டத்தில், பஞ்சாப் காவல் துறை அணியை எதிர்த்து புணே ராணுவ அணி விளையாடியது. இதில், ராணுவ அணி
  73 - 65 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் காவல் துறை அணியை வீழ்த்தியது. ராணுவ அணியின் கோகுல் ராம் 21 புள்ளிகளும், ஐசக் தாமஸ் 16 புள்ளிகளும் சேர்த்து வெற்றிக்கு உதவினர். 
  பஞ்சாப் வீரர் அம்ஜியாத் சிங் 24 புள்ளிகளும், ராஜ்பீர் சிங் 10 புள்ளிகளும் எடுத்தனர்.
  வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஐ.ஓ.பி. - புணே ராணுவ அணிகள் விளையாடுகின்றன. போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பி.எஸ்.ஜி. சுழற்கோப்பையுடன் ரூ. 1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai