சுடச்சுட

  

  இந்தியா-இலங்கை 4-ஆவது ஆட்டம்: கொழும்பில் இன்று நடைபெறுகிறது

  By DIN  |   Published on : 31st August 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
  முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-ஆவது ஆட்டத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
  இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. அதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும். தொடக்க வீரர்கள் ஷிகர் தவன், ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேநேரத்தில் பின்வரிசையில் களமிறக்கப்பட்ட கே.எல்.ராகுல் இதுவரை ஜொலிக்கவில்லை. அதனால் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
  மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேதார் ஜாதவுக்குப் பதிலாக மணீஷ் பாண்டே இடம்பெற வாய்ப்புள்ளது. மற்றபடி பேட்டிங்கில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. கேப்டன் கோலி, தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ஜஸ்பிரித் பூம்ரா-புவனேஸ்வர் குமார் கூட்டணியே இந்த ஆட்டத்திலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஷர்துல் தாக்குருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினமே. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
  இலங்கை அணி தொடர் தோல்வி, முன்னணி வீரர்களின் காயம் போன்றவற்றால் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் சன்டிமல் வலது பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்ட கபுகேதராவும் காயம் காரணமாக விலகிவிட்டார். அதனால் மலிங்கா தலைமையில் களமிறங்குகிறது இலங்கை அணி. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நிரோஷன் டிக்வெல்லா, குஷல் மென்டிஸ், லஹிரு திரிமானி ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை அணி. மற்றபடி அந்த அணியில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக ஆடவில்லை. வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயாவையும் நம்பியுள்ளது இலங்கை அணி. 
  போட்டி நேரம்: பிற்பகல் 2.30
  நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 3

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai