சுடச்சுட

  

  ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பல இடங்கள் முன்னேறிய மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேச வீரர்கள்

  By எழில்  |   Published on : 31st August 2017 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shai_hope909090

   

  ஐசிசியின் சமீபத்திய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேச அணி வீரர்கள் பல இடங்கள் முன்னேறியுள்ளார்கள். 

  ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்திலும், கேப்டன் கோலி 5-ஆவது இடத்திலும் உள்ளனர்.

  இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமாக வெற்றி பெற்றுள்ளது. தொடக்க வீரர் பிராத்வெயிட் 95, ஷாய் ஹோப் 118 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். முதல் இன்னிங்ஸிலும் பிராத்வெயிட் 134, ஹோப் 147 ரன்கள் எடுத்து இரு இன்னிங்ஸ்களிலும் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  இந்தப் போட்டிக்குப் பிறகு 14 இடங்கள் முன்னேறி 16-ம் இடம் பிடித்துள்ளார் பிராத்வெயிட். ஆட்ட நாயகன் ஷாய் ஹோப் 42-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 23-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வார்னர் சதமடித்தும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 28 ஓவர்களில் 85 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 17-ஆவது முறையாகும். இந்தப் பங்களிப்பால் ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  இந்தப் போட்டியினால் வார்னர் 5 இடங்கள் முன்னேறி 6-ம் இடம் பிடித்துள்ளார். வங்கதேச வீரர் தமிம் இக்பால் ஆறு இடங்கள் முன்னேறி 14-ம் இடத்தைப் பிடித்துள்ளார். 

  பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்தின் ஆண்டர்சன், இந்தியாவின் அஸ்வின் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அடுத்த இரு இடங்களில் இலங்கையின் ஹெராத்தும் ஆஸ்திரேலியாவின் ஹேஸில்வுட்டும் உள்ளார்கள். டாக்கா டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் 3 இடங்கள் முன்னேறி 14-ம் இடம் பிடித்துள்ளார். 

  அதேபோல ஆல்ரவுண்டர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஜடேஜா 2-ஆவது இடத்திலும் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளார்கள்.

  ஐசிசி தரவரிசை

  டெஸ்ட்: பேட்ஸ்மேன்கள்

  1. ஸ்மித்
  2. ஜோ ரூட்
  3. வில்லியம்சன்
  4. புஜாரா
  5. விராட் கோலி

  டெஸ்ட்: பந்துவீச்சாளர்கள்

  1. ஜடேஜா
  2. ஆண்டர்சன்
  3. அஸ்வின்
  4. ஹெராத்
  5. ஹேஸில்வுட்

  டெஸ்ட்: ஆல்ரவுண்டர்கள்

  1. ஷகில் அல்ஹசன்
  2. ஜடேஜா
  3. அஸ்வின்
  4. மொயீன் அலி
  5. பென் ஸ்டோக்ஸ்

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai