சுடச்சுட

  

  4-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் 3 வீரர்களுக்கு வாய்ப்பு!

  By எழில்  |   Published on : 31st August 2017 02:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni711

   

  இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

  டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

  இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனி விளையாடும் 300-வது போட்டி இது. இதற்காக இந்திய கேப்டன் கோலி, தோனிக்கு ஒரு நினைவுப்பரிசை வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai