சச்சின் சாதனையை மிஞ்சினார்: விராட் கோலி புதிய உலக சாதனை!

இதற்கு முன்பு சச்சின் 232 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்...
சச்சின் சாதனையை மிஞ்சினார்: விராட் கோலி புதிய உலக சாதனை!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3- 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36.5 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. 
விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்தார். தினேஷ் கார்த்திக் அரை சதமெடுத்தார். கோலி 111, தினேஷ் கார்த்திக் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதன் மூலம் சேஸிங்கில் அதிக சதமெடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்பு சச்சின் 232 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். நேற்றைய சதத்தின் மூலம் சேஸிங்கில் 18 சதங்கள் எடுத்து முதலிடத்தை எட்டியுள்ளார் கோலி.

சேஸிங்கில் அதிக சதமெடுத்த வீரர்கள்

18 கோலி (102 இன்னிங்ஸ்) 
17 சச்சின் (232)
11 தில்ஷன் (116)
11 கெய்ல் (139)

28 ஒருநாள் சதங்களைக் கடக்கத் தேவைப்பட்ட இன்னிங்ஸ்கள்

181 கோலி 
259 சச்சின்
314 பாண்டிங்
416 ஜெயசூர்யா

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி

முதலில் பேட்டிங் செய்தபோது: 10 சதங்கள் (79 இன்னிங்ஸ்); சராசரி 42.30
சேஸிங்கில்: 18 சதங்கள் (102 இன்னிங்ஸ்); சராசரி 66.27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com