Enable Javscript for better performance
ஆசிய கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    hocky

    வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.

    மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது.
    முன்னதாக, குருப் சுற்றின் இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா, குர்ஜித் கெளர் ஆகியோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
    இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுமே கவனமுடன் விளையாடின. அதில் மலேசியா தடுப்பாட்டம் ஆட, இந்தியா தனக்கான கோல் வாய்ப்புக்காக காத்திருந்தது. இந்நிலையில் 2-ஆவது கால்மணி நேரத்தில் மலேசியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றவிடாமல் இந்தியாவின் ரஜனி எடிமர்பு அருமையாக தடுத்தார்.
    அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தாலும், அது பலனளிக்காமல் போனது. இவ்வாறாக இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில், ஆட்டத்தின் முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவடைந்தது.
    பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் இந்தியா சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியது. அதன் பலனாக ஆட்டத்தின் 54-ஆவது நிமிடத்தில் முதல் கோலை இந்தியா பதிவு செய்தது. அணியின் வந்தனா கட்டாரியா அருமையாக ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
    அடுத்த அதிரடியாக 55-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, இந்தியாவின் குர்ஜித் கெளர் அற்புதமான கோலாக மாற்றி இந்தியாவை மேலும் பலப்படுத்தினார். இறுதிவரை மலேசிய அணிக்கு கோல் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai