Enable Javscript for better performance
துப்பாக்கி சுடுதல்: ஹீனாவுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    
    heena

    காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
    ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற ஹீனா சித்து, மொத்தமாக 626.2 (386+240.8) புள்ளிகளை வென்று முதலிடம் பிடித்தார். இது, சர்வதேச போட்டிகளில் ஹீனா வெல்லும் 2-ஆவது தங்கமாகும்.
    சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை ஃபைனல்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில், ஜிது ராயுடன் சேர்ந்து அவர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    இதனிடையே, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் இதர இந்தியர்களான ககன் நரங் மற்றும் ரவிகுமார் முறையே 4, 5-ஆவது இடங்களைப் பிடித்தனர்.
    ககன் நரங் சாதனை: இதனிடையே, ககன் நரங் தனது தகுதிச்சுற்றில் 626.2 புள்ளிகளை வென்று காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai