Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    *  அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக பிரஃபுல் படேல் தேர்வு செய்யப்பட்ட தேர்தலை ஒத்தி வைத்து தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
    *  கத்தார் கிளாஸிக் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் தனது 2-ஆவது சுற்றில் 8-11, 6-11, 9-11 என்ற செட் கணக்கில் பெருவின் டியேகோ எலியாஸிடம் தோல்வி கண்டார்.
    *  நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், விளையாட்டு அறிவியல் மையம் மற்றும் விளையாட்டு மருந்துத் துறைகளை ஏற்படுத்த 5 கல்வி நிறுவனங்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
    *  பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களுக்கான பட்டியலில் அங்கிதா ரெய்னா, சாகேத் மைனேனி, பூரவ் ராஜா, திவிஜ் சரண் ஆகியோரையும் சேர்க்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
    *  கால்பந்தாட்ட போட்டிகளின்போது, பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அணிகள் சார்பான அதிகாரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களுக்கென மஞ்சள் மற்றும் சிகப்பு அட்டை எச்சரிக்கை அளிப்பதை சோதனை அடிப்படையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா கையாள உள்ளது.
    *  பனி விழும் வானிலையில் பந்துவீசும்போது, பந்தில் பிடிப்பு இல்லாமல் போகும் சவாலை எதிர்கொள்ளும் விதமாக இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஈரப்பதம் மிக்க பந்துகளை கொண்டு செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டார்.
    *  பிரிட்டன் தடகள வீரரான மோ ஃபாரா தனது நீண்டநாள் பயிற்சியாளரான ஆல்பர்டோ சலாஸாரை பிரிந்தார்.
    *  துணை கண்டச் சூழ்நிலைகளில் புதிய பந்துகளின் மூலம் பந்துவீசுவதில் இந்திய பந்துவீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ரா ஆகியோர் சிறந்தவர்கள் என நியூஸிலாந்து பேட்ஸ்மேன் காலின் மன்ரோ கூறியுள்ளார்.
    *  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வங்கதேச அணி மோசமான முறையில் விளையாடியது தொடர்பாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விசாரிக்க உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai