Enable Javscript for better performance
பல சாம்பியன்கள் இருப்பது ஆரோக்கியமானது: ஸ்ரீகாந்த்- Dinamani

சுடச்சுட

    
    srikanth

    பெற்றோர் மற்றும் சகோதரருடன் ஸ்ரீகாந்த்.

    ஒரு விளையாட்டில் பல சாம்பியன்கள் இருப்பது ஆரோக்கியமானது என்று இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.
    சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், கடந்த இரு மாதங்களில் மொத்தமாக 4 பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
    இந்நிலையில், டென்மார்க் ஓபனில் பட்டம் வென்றதற்கு ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் கூறியதாவது:
    பாட்மிண்டன் விளையாட்டில் நீண்ட காலமாக மலேசியாவின் லீ சாங், சீனாவின் லின் டான் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், தற்போது பாட்மிண்டன் களம் விரிவடைந்துள்ளது. நான், விக்டர் அக்ùஸல்சன் போன்ற இந்திய வீரர்களும் போட்டிகளை வெல்கின்றோம்.
    ஒரு விளையாட்டில் பல்வேறு சாம்பியன்கள் இருப்பது அந்த விளையாட்டுக்கு ஆரோக்கியமானதாகும். இன்றைய சூழ்நிலையில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். தங்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது, எந்தவொரு பலம் வாய்ந்த வீரரையும் வீழ்த்துகிறார்கள். எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடுவது முக்கியமாகும்.
    என்னைப் பொருத்த வரையில், தரவரிசையில் நான் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. கடந்த 8-10 மாதங்களில் சிறப்பாக விளையாடி வந்துள்ளேன். ஆட்டத்தை அனுபவித்து விளையாடுவதில் மட்டுமே எனக்கு ஆர்வம் உள்ளது. நன்றாக விளையாடும் பட்சத்தில் தரவரிசை என்னைத் தேடி வரும். நான் அதைத் தேடிச் செல்ல விரும்பவில்லை என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai