Enable Javscript for better performance
பாரீஸ் மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் லோபஸ்- Dinamani

சுடச்சுட

    
    lobas

    ஹெர்பர்டுக்கு பந்தை திருப்பும் லோபஸ்.

    பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
    முன்னதாக, தனது 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் ஹியூஜஸ் ஹெர்பர்டை எதிர்கொண்ட லோபஸ் 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார். இதையடுத்து அவர் தனது 3-ஆவது சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் புய்லேவை எதிர்கொள்கிறார்.
    குரோஷியாவின் போர்னா கோரிச், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜேன் லெனார்டு ஸ்ட்ரஃபை வீழ்த்தினார். அவர் தனது 3-ஆவது சுற்றில் சக நாட்டவரான மரின் சிலிச்சை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் காரென் கசானோவை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய உருகுவேயின் பாப்லோ கியூவாஸ், தனது அடுத்த சுற்றில் ஸ்பெயினின் ரமோஸ் வினோலஸை எதிர்கொள்கிறார்.
    பிரிட்டனின் கைல் எட்மண்ட் 5-7, 7-6(7), 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எவ்ஜெனி டோன்ஸ்கியை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் அவர் அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் மோதுகிறார். அதேபோல் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மென் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்கியை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அந்த சுற்றில் அவர் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.
    இதனிடையே, கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ஜூலியன் பெனடியூவிடம் தோல்வி கண்டார். பிரான்ஸ் வீரரான ரிச்சர்டு காஸ்கட் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான பெனாய்ட் பேரை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொள்கிறார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai